ஆரம்ப காலம் முதல் தாயகத்தில் நடைபெற்ற யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் தாய் தந்தையை இழந்த பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வை கருத்திற்கொண்டு சுவிஸ் வாழ் உறவுகளின் நிதி உதவியில் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் கிராமத்தில் அம்மன் மகளிர் இலல் ம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிள்ளைகளுக்கு திருப்திகரமான, பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்படுத்தும் முகமாக 2007 ஆண்டு காலப்பகுதியில் மூன்று மாடிக் கடடி; டம் அமைதது; வழங்கப்பட்டதிலிருந்து இன்று வரை பிள்ளைகளின் பராமரிப்புக்காக தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படுகின்றது.
தற்போது 48 பெண் பிள்ளைகள் இங்கு பராமரிக்கப்பட்டு கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பிறநலன்கள் அனைத்தும் முடிந்தளவு சிறப்பாக மேற்கொள்ளப்படுவதுடன் கணனிக் கல்வி, தையல் சார்ந்த தொழிற்பயிற்சிகளும்
வழங்கப்படுகின்றது.
தாய் தந்தையரை இழந்து, குடும்ப வறுமையினால் படிப்பை இடைநிறுத்தி, ஆதரவற்ற நிலையில் சிறுவர் நன்னடத்தை திணைக்களகம், நீதவான் நீதிமன்றஙக்ளுக்கூடாக இணைக்கப்படும் பிள்ளைகள் இங்கு பராமரிக்கப்பட்டு மீண்டும் பாடசாலைக்கு இணைக்கப்பட்டு கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வருகின்றமை மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் ஏற்படுத்துவனவாக உள்ளது.
சுவிஸ் எஸ்.ரி.ஏ இனால் அமைக்கப்பட்ட மூன்று மாடி கடடி; டத்திற்கு வர்ணப்பூச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டு காணி வளாகத்தில் ஊஞ்சல் அடங்கலான விளையாட்டு உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
- பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துதல்
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கு மாலைநேர வகுப்புக்கு அருகில் உள்ள கல்வி நிலையத்திற்கு செல்கின்றனர். வெளியிடங்களுக்கு வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு வேணடி; ய துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது..
அம்மன் மகளிர் இல்லத்திலிருந்து பராமரிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி வந்தாறுமுலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரு மாணவிகள் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு
அழைப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் செல்வி ந.சுகன்யா என்ற மாணவி 2020 ம் வருடம் மார்ச் மாதத்திற்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இப்புதிய வருடத்திலிருந்து சுவிஸ் எஸ்.ரி.ஏ இன் தலமையில் ஆங்கில மற்றும் கணித விசேட வகுப்புக்கள் மேற்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். - பிள்ளைகளின் உளவளச் செயற்பாடுகளை மேம்படுத்துதல் சிறுவர் நன்னடத்தை திணைக்களகத்தால் உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சிப்பட்டறைகள்நடைபெறுவதுடன்கடறக்ரை,வராலாற்றுசிறப்பு மிக்க ஆலயங்களுக்கும் குறிப்பிட்ட சில மாதங்களில் பிள்ளைகள் அனைவரும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இச்சுற்றுலாசெயற்பாடுகள்மூலம்பிள்ளைகள்பலவிடயஙக்ளை கற்றுக்கொண்டதுடன் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவனவாக இருக்கின்றது.
- கணனிக் கல்வி மேம்படுத்துதல். இல்லத்திற்கு அருகில் நடைபெறும் சிவனருள் கணனி நிலையத்தில் கணனி வகுப்புக்களில் பிள்ளைகள் பங்குபற்றி கணனி அடிப்படைக் கல்வி,தகவல்தொழினுட்பம்போன்றவிடயஙக்ளில்பயிற்சிகளை பெற்றுவருகினற்னர்.
இதனால் உயர்தரத்தில் தொழில் வாய்ப்புக்கள் அதிகளவு உள்ள கணனி தகவல் தொழினுட்ப பாடங்களை விரும்பி தேர்வு செய்து கற்பதற்கு பேருதவியாக அமைந்துள்ளது.