புலர்வின் பூபாளம் நிறுவனம் மற்றும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் நிதி அனுசரணையில் நீர்த் தேவையிலுள்ள மட்டு அம்பாறை மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு குடிநரீ ; தாங்கிகள், கொட்டுக் கிணறுகள், பொதுக்கிணறுகள் என்பன அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி புலர்வின் பூபாளம் நிதி அனுசரணையில் தாண்டியடி கிராமத்தில் ஒரு பொதுக்கிணறும் கண்ணகிபுரம், பனங்காடு, மட்டக்ளப்பில் புன்னங்குளம் போன்ற கிராமங்களுக்கு ஆறு குடிநீர் தாங்கிகளும் வழங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் நிதி அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் விநாயகர் கிராமத்தில் நான்கு கொட்டுக் கிணறுகளும் மட்டக்களப்பில் தாந்தாமலை கிராமத்தில் இரு கொட்டுக்கிணறுகளும், மட்டக்களப்பு காஞ்சிரங்குடா கிராமத்தில் இரு பொதுக்கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புலம்பெயர் உறவுகளில் நிதி அனுசரணையில் பத்து குடிநீர் தாங்கிகள் விசேடமாக கிளிநொச்சி கணட் hவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.