கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள உறவுகளை இழந்த மூதாளர்கள் பராமரிப்பு அறற் நிலையில் துன்பப்படுவதை கருத்திற்கொண்டு பிரான்ஸ் தமிழ் உறவுகளின் நிதி உதவியில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தருமபுரம் கிராமத்தில் நமச்சிவாய மூதாளர் பேணகம் என்ற பெயர்pல் வயோதிபர் இல்லம் 2015.09.15ம் திகதி எஸ்.ரி.ஏ இன் தலமையில் திறக்கப்பட்டிருந்தது.
இதன்படி இச்செயற்றிட்டம் மற்றும் தொழிற்பயிற்சி திட்டங்களுக்கான காணியானது கனடா உறவுகளின் நிதி அனுசரணையில் எஸ.ரி.ஏ ஊடாக
கொள்வனவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வன்னியில் எவரும் கவனிப்பாரற்று கைவிடப்பட்டு பிரதேச செயலகங்களுக்கூடாக அனுப்பி வைக்கப்படும் மூதாளர்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றனர். தற்போது இங்கு 35 மூதாளர்கள் பராமரிக்கப்படுகின்றனர். தற்போது இம்மூதாளர் பேணலகத்;துடன் இணைந்த வகையில் சுவிஸ் எஸ்.ரி.ஏ இன் வட மாகாண திட்ட அலுவலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.