தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள பிள்ளைகள் தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதன்படி அம்மன் பவுண்டேசன் பின்தங்கிய நிலையில் இருந்த கமு.தி கோ பெருநாவலர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் – 05 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான விசேட கற்பித்தல் செயற்பாடுகளை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய நிதி பங்களிப்பில் மேற்கொண்டது.
இதன்படி எட்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பரிசில்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா அணi; மயில் இடம்பெற்றது.
மேலும் 2020 இருந்து இச்செயற்றிட்டத்திற்கு சுவிஸ். எஸ்.ரி.ஏ அனுசரணை வழங்கி வருகின்றதுடன் மேலும் சில படசாலைகள் உள்ளவாங்கப்பட்டு மாதிரி வினாத்தாள் பரீட்சைகளை செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு மாதம் 100க்கு மேற்பட்ட மாணர்வளுக்கு மூன்று மாதிரி வினாத்தாள் பரீட்சை மற்றும் கருத்தரங்குகளும் 2020 ஓகஷஸ்ட் மாதம் வரை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.