திருமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பதினொரு தமிழ் பழங்குடி கிராமங்கள் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றியும், தொழில் வாய்ப்பினற்pயும், காணி பிரச்சனைகளாலும் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் பழங்குடி கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கு உதவுவதற்கான நிதி மூலத்தை உருவாக்கும் நோக்கில் நோர்வே உறவுகளின் நிதி
உதவியில் புலர்வின் பூபாளம் பணi;ண அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனின் கீழ் செயற்படுகின்றது. இங்கு கச்சான், சோளம் செய்கை மற்றும் ஆடு வளர்ப்பிற்கான பண்ணை கட்டுமானப் பணிகளும் இடமபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.