வவுனியா மாவட்டத்தில் தவசிக்குளம் கிராமத்தில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை ஏற்படுத்தும் முகமாக புதுவாழ்வு பூங்கா என்ற பெயரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதில் 40 பிள்ளைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
இப்பிள்ளைகளையும் சமூகத்தில் பெறுமதியான பிரஜைகளாக்கும் நோக்கும் கருதி சுவிஸ் எஸ்.ரி.ஏ அமைப்பானது 2010 ஆண்டிலிருந்து இத்திட்டத்திற்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.
இப்பிள்ளைகள் காலையில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு முதற்கட்டமாக நாளாந்த வாழ்வியல் தொடர்பாக பயிற்சியளித்து புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றது.
அத்துடன் நவீன கற்பித்தல் நுட்பங்களை கையாணடு; இத்துறையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக்கொ ண்டுபயிற்சிகள்மேற்கொள்ளப்படுகின்றது.இதன்மூலம்நல்லமாற்றஙக்ள்பிள்ளைகள்மத்தியில் ஏற்படுவதை காணக்கூடியதாக உள்ளமை மகிழ்ச்சியளித்துள்ளது.