கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முல்லை, பரந்தன் வீதியில், தருமபுரம் மேற்கு கிராமத்தில் இத்திட்டம் நடைபெறுகின்றது. 10 பெண் தலமைத்துவ குடும்ப குழுவாக இணைந்து தையல் வேலைகளையும், பனையோலையிலான பொருட்களை உற்பத்தி செய்து விற்றும் வருகின்றனர்.

இதன்மூலம் அவர்களது குடும்பத்தைக் கொண்டு செல்வதற்கான ஒர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இச்செயற்றிட்டத்திற்குரிய ஓர் கடடி; ட அமைத்தலுக்கான நிதியை கனடா உறவுகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மேலும் இச்செயற்றிட்டத்தில் பலரை உள்வாங்கி நடைமுறைப்படுத்தும் நோக்கில் நோர்வே மகளிர் அமைப்பின் நிதி அனுசரணையில் சென்ற வருடம் பல்தேவைக்கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிலும் தொழிற்பயிற்சி திட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.